Local

பாடசாலைகள் ஆரம்பித்தாலும் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என அறிவிப்பு!

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் தமது சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் வரை ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை ஆரம்பிக்கும் முன்னரோ, பரீட்சைகளை நடத்தும் முன்னரோ அரசாங்கம் தமது பிரச்சினைகளை தீரக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தில் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

போராட்டம் முடியும் முடியும் முன்னர் பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் கற்பித்தல் நடவடிக்கைகளில் கலந்துக்கொள்ள போவதில்லை என அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வெல பஞ்ஞானசேகர தேரர் (Yalwela Panjanasekara) கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading