World

பாடசாலையில் நடாத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி!

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (10) துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. திடீரென்று பாடசாலையின் ஒரு பகுதியிலிருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக வகுப்பறைகளில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சிதறி ஓடினர். சில மணித்துளிகள் களவரத்துக்குப் பின்னர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 10 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். பாடசாலையில் உள்ள கழிவறைகளில் ஒன்றில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவர்தான் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading