Local

பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு1648 கோடி ரூபா செலவு!

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு சுமார் 1648 கோடி ரூபாவை செலவிட எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, புதிய கல்வியாண்டுக்குத் தேவையான பாடசாலைப் பாடப்புத்தகங்களில் 45 வீதமானது அரச அச்சக கூட்டுத்தாபனத்தினாலும் ஏனைய 55 வீதம் தனியார் அச்சகங்களினாலும் அச்சிடப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கான மூல காகிதம் இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மேலும் செப்டெம்பர் 13 ஆம் திகதி புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading