World

பாப்பரசர் லியோவிற்கு நடந்த புற்றுநோய் சத்திரசிகிச்சை – வத்திக்கான் வெளியிட்ட அறிவிப்பு

14 ஆவது பாப்பரசர் லியோவுக்கு நுரையீரல் புற்றுநோய் இருந்த நிலையில் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

அவரது வலது நுரையீரலின் கீழ் பகுதியிலேயே புற்றுநோய் ஏற்பட்டிருந்த நிலையில் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிக்கை வெளியிட்டுள்ளது.

71 வயதான அவருக்கு, இன்று ரோமிலுள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் 90 நிமிடங்களுக்கு அதிக காலம் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அவருக்கு நுரையீரல் அடினோகார்சினோமா (lung adenocarcinoma) இருப்பது உறுதி செய்யப்பட்டது. எவ்வித சிக்கல்களும் ஏற்படவில்லை என வத்திக்கான் தெரிவித்துள்ளது.

பாப்பரசர் லியோவிற்கு நடந்த புற்றுநோய் சத்திரசிகிச்சை - வத்திக்கான் வெளியிட்ட அறிவிப்பு | Pope Leo Lungs Cancer Vatikan Surgery

வழமையான பரிசோதனைகளின்போதே இந்த நுரையீரல் கட்டி முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் பாப்பரசர் சுமார் ஒரு வாரம் வைத்தியசாலையில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading