Local

பாராளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7452 வேட்பாளர்கள் போட்டி!

பாராளுமன்றத்துக்கு வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7 ஆயிரத்து 452 வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுகின்றனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலும் 617 சுயேச்சைக் குழுக்களிலும் இவர்கள் களமிறங்கியுள்ளனர்.

22 தேர்தல் மாவட்டங்களுக்கும் அரசியல் கட்சிகளினூடாக 3 ஆயிரத்து 652 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் 3 ஆயிரத்து 800 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

திகாமடுல்ல மாவட்டத்திலேயே அதிகளவான அரசியல் கட்சிகளும் (20), சுயேட்சைக்குழுக்களும் (34) போட்டியிடுகின்றன.

கம்பஹா மாவட்டத்திலேயே ஆயிரத்து 173 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

நாடாளுமன்றத்துக்கு 29 பேர் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவுசெய்யப்படுவார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading