World

பாராளுமன்றத்தில் கைகலப்பில் ஈடுபட்ட எம்.பிக்களால் பரபரப்பு!

பாராளுமன்றத்தில் எம்.பிக்களுக்கு இடையே ஏற்பட்ட  வாக்குவாதம்  கைகலப்பாக மாறி, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் ஜோர்டானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் அம்மானில் அண்மையில்  நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில், அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மீதான விவாதத்தின் போது தேவையற்ற கருத்துக்களுக்காக உறுப்பினர் மன்னிப்பு கேட்க மறுத்ததால், ஏற்பட்ட வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது.

இதன்போது ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் அவையில் பதற்றம் நிலவியது. இது குறித்து பேசிய எம்.பி கலீல் அத்தியே இந்த நடத்தை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நாட்டின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து வெளியான வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading