Local

பாராளுமன்றத்தை கலைக்க தயாராகிறார் ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தை கலைக்கக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இன்று தெரிவித்தார். 

அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துக்கு பின்னர், நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க சிறந்த தலைவராக இருக்கின்றபோதிலும், அவரை சுயாதீனமாக இயங்குவதற்கு மொட்டு கட்சி இடமளிக்காது எனவும், காலை வாருவதற்கான நகர்வுகளே முன்னெடுக்கப்பட்டுவருகின்றன எனவும் வெல்கம குறிப்பிட்டார். 

அதேவேளை, வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தாலும் இந்த ராஜபக்சக்களின் ஆட்சியில் அமைச்சு பதவி எதையும் பொறுப்பேற்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading