Local

பாராளுமன்றம் வருவதற்கு ரிஷாட்டுக்கு அனுமதி கிடைக்குமா?

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கான கோரிக்கை சட்ட ரீதியில் முன்வைக்கப்படுமாயின் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு சபை அமர்வுகளில் பங்கேற்க இடமளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார்.

அதேவேளை, ரிஷாட் பதியுதீன்கோரிக்கை விடுத்திருந்தபோதிலும் பீசீஆர் பரிசோதனையை காரணம்காட்டி அனுமதி மறுக்கப்பட்டதாக எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

ரிஷாட் பதியுதீன் தலைமறைவாகியிருந்ததால் அவரை பீசீஆர் பரிசோதனைக்கு பின்னரே சபைக்கு அனுமதிக்கமுடியும் என சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading