Local

பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு அதிகரிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் மாதம் வரை எம்.பி.க்களின் எரிபொருள் கொடுப்பனவு தொடர்பான பணம் பழைய விலையிலேயே வழங்கப்பட்டு வந்தது.

எவ்வாறாயினும், தூர பிரதேசங்களில் தங்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு புதிய விலையில் எரிபொருள் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொலைதூர பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு ஏறக்குறைய இரண்டு இலட்சத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவும் சுமார் ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.

இம்மாத சம்பளத்துடன் உரிய பணமும் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading