Local

பாரிய அந்நிய செலாவணி தட்டுப்பாட்டில் இலங்கை நெருக்கடியில்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக அதனை தவிர்க்க இந்தியாவிடம் 3,700 கோடி ரூபாய் கடன் தொகையை இலங்கை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் தொற்று காரணமாக, சுற்றுலா மற்றும் ஏற்றுமதி துறைகளில் இலங்கை பாரிய சரிவினை எதிர்நோக்கியுள்ளதுடன்,அந்நிய செலாவணி சிக்கலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலவரப்படி, வரும் ஜனவரி மாதம் வரை மட்டுமே பெட்ரோல், டீசலை வாங்கும் நிலையில் நாட்டின் பொருளாதார காணப்படுவதாகவும்,இப்பிரச்சினையை சரி செய்ய இந்தியாவிடம் 3,700 கோடி ரூபாய் கடன் தொகையை இலங்கை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய,இலங்கையின் கோரிக்கையை இந்தியா விரைவில் ஏற்றுக்கொள்ளும் என்றும், இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading