Local

இலங்கை நோக்கி பயணித்த கப்பல்மோதி உடைந்து விழுந்த பாலம்!

அமெரிக்காவில் பாலமொன்றின் மீது சரக்கு கப்பல் ​மோதியதில் பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.

மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் இன்று அதிகாலை மோதியுள்ளது.

இதன்போது பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த பல வாகனங்கள் நீரில் மூழ்கி 20 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த “டாலி“ என்ற கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த கப்பல் கொழும்பு நோக்கி பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading