World

பாலைவனத்தில் அரிசி அறுவடை…!!!

🌾🇰🇼 30 கிலோ விதையில் 3,000 கிலோ பாஸ்மதி அரிசி! குவைத் விவசாயியின் வியக்க வைக்கும் சாதனை!

பாலைவன நாடான குவைத்தில் பாஸ்மதி அரிசியைப் பயிரிட்டு 3,000 கிலோ விளைச்சலைப் பெற்றுள்ள விவசாயி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

குவைத்தின் வஃப்ரா பகுதியில் விவசாய ஆர்வலரான ஷபிப் அல்-அஜ்மி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை சாகுபடியிலேயே இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் சுமார் 5,000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் வெறும் 30 கிலோ பாஸ்மதி விதைகளைக் கொண்டு சாகுபடி ஆரம்பிக்கப்பட்டது. அதிக வெப்பநிலை மற்றும் மோசமான வானிலை போன்ற சவால்கள் இருந்தபோதிலும், எதிர்பார்ப்புகளைத் தாண்டி சுமார் 3,000 கிலோ அரிசி அறுவடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், விவசாயக் கழிவுகளை வீணாக்காமல் மறுசுழற்சி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அரிசி உமியை இயற்கை உரமாகவும், புல் மற்றும் ஏனைய விவசாயக் கழிவுகளை கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய விவசாயப் பரிசோதனைகளின் அனுபவங்களும் இந்த வெற்றிக்கு உதவியுள்ளதாக விவசாயி தெரிவித்துள்ளார்.

அடுத்தகட்டமாக குவைத்தின் மேலும் பல பகுதிகளில் பாஸ்மதி சாகுபடியை விரிவுபடுத்துவதுடன், குங்குமப்பூ பயிரிடுவதற்கும் திட்டமிட்டுள்ளார்.

பாலைவனச் சூழலிலும் விவசாயத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்தச் சாதனை, குவைத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் அரிசி இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading