World

பிரசவ வலியுடன் சைக்கிளை ஓட்டிச் சென்று குழந்தை பெற்றெடுத்த நியூசிலாந்து எம்.பி!

நியூசிலாந்தில் பெண் எம்.பி ஒருவர் நள்ளிரவு பிரசவ வலியுடன் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

Julie Anne Genter என்ற நியூசிலாந்த எம்.பி-யே இவ்வாறு குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
இதுகுறித்து Julie Anne Genter தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாவது, இன்று அதிகாலை 3.04 மணியளவில் எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை வரவேற்றோம்.

நான் உண்மையில் பிரசவத்தில் சைக்கிள் ஓட்டத் திட்டமிடவில்லை, ஆனால் அவ்வாறு சைக்கிள் ஓட்ட நேர்ந்தது.

அதிகாலை 2 மணிக்கு மருத்துவமனைக்குச் செல்லும் போது எனக்கு வலி அவ்வளவு மோசமாக இல்லை, 2-3 நிமிட இடைவெளியில் வலி இருந்தது.

நாங்கள் மருத்துவமனைக்கு சொன்ற 10 நிமிடங்களுக்குப் பிறகு வலியின் தீவிரம் அதிகரித்தது என்று Genter பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

மேலும், மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்றது மற்றும் பெண்குழந்தையுடன் கணவர் உறங்கிக்கொண்டிருக்கும் புகைப்படத்தையும் Genter பதிவிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading