Local

பிரதமர் மஹிந்த மற்றும் ரணில் சந்திப்பு சூழ்ச்சி அம்பலமானது!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க பிறந்த நாள் விருந்து ஒன்றில் ஒன்றாக உணவு உட்கொள்ளும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியது.

கடந்த இரண்டு நாட்களாக இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் முழுவதும் பரவி வருகின்றன.

எப்படியிருப்பினும் இந்த புகைப்படங்கள் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தங்களுக்கு நெருக்கமான வர்த்தகர் ஒருவரின் பிறந்த நாள் விருந்தில் எடுக்கப்பட்டவை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“இவை ஒன்றரை மாதங்கள் பழைய புகைப்படங்கள். பொய்யான சர்ச்சைகளை ஏற்படுத்துவதற்கு பலர் முயற்சிக்கின்றனர்.

ஒவ்வொரு வருடமும் மெல்வினின் பிறந்த நாளில் நானும் மஹிந்தவும் கலந்து கொள்வோம். இது பல வருடங்களாக நடைபெறும் ஒரு விடயமாகும்.

இது ஒரு புதிய விடயம் அல்லது. அங்கு அரசியல் பேசப்படவும் இல்லை. நாட்டு பிரச்சினைகளுக்கு மத்தியில் இல்லாத ஒரு விடயத்தை காட்ட முயற்சிக்க வேண்டாம்.

சில மாதங்களில், உண்மையான அரசியல் மாற்றத்தை அனைவரும் காண முடியும்” என ரணில் விக்ரமசிங்க சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading