பிரதேசம் ஒன்றை தனிமைப்படுத்தல்( Lock Down ) என்றால் என்ன?

கொவிட்-19 தொற்று பாரிய அளவில் சமூகத் தொற்றாக மாறி பல உயிர்களை காவு கொள்வதை தடுப்பதற்காக எடுக்கப்படும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும்.
இவ்வகையான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது பிரதானமாக 10 காரணிகள் கருத்தில் கொள்ளப்படும்.
1. கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை.
2. வைரஸ் தொற்று பரவுகின்ற வேகம்.
3. PCR/ Rapid Antigen Test பரிசோதனைகளை செய்யக்கூடிய வசதி
4. சுகாதாரத் துறையினரின் ஆளணி வசதி
5. மக்களின் பரிசோதனை களுக்கான ஒத்துழைப்பு
6. மக்களின் சனத்தொகை அடர்த்தி
7. பிற மாவட்டங்களில் இருந்து உள்வரும் வெளிச் செல்லும் நபர்களின் எண்ணிக்கை
8. பொதுவிடங்களில் மக்கள் கூடுகின்ற அளவு
9. பின்பற்றப்படும் பாதுகாப்பு முறைகள்
10. ஏனைய திணைக்களங்களின் ஒருமித்த ஒத்திசைவு
மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களின் அடிப்படையிலேயே ஒரு பிரதேசத்தின் பகுதிகள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகிறது இதற்கு மேலாக வியாபாரிகளின் நோக்கங்களுக்காகவும் இனவாதிகளின் நோக்கங்களுக்காகவும் பிரதேச வாதிகளின் நோக்கங்களுக்காகவும் அரசியல்வாதிகளின் நோக்கங்களுக்காகவும் சுகாதாரத்துறை சிபார்சினை ஒருபோதும் வழங்க மாட்டாது.
சுகாதார வைத்திய அதிகாரிகளினால் ( MOH ) பிரேரிக்கப்படும் முடிவானது பிராந்திய, மாகாண பணிமனையினால்( RDHS, PDHS ) ஆழமாக பரிசீலிக்கப்பட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும்( DGHS) அரசாங்க அதிபருக்கும் (GA) முன்மொழியப்படும். அவர்கள் இருவரும் அந்த முன்மொழிவை தமது ஆளணியினரூடாக பரிசீலித்து Covid-19 க்கான விசேட ஜனாதிபதி செயலணிக்கு ( Special President Task Force ) அனுப்பி வைப்பார்கள். விசேட ஜனாதிபதி செயலணி பரந்து இருக்கின்ற புலனாய்வுத் துறையினர் (State Intelligence Service) ஊடாக ஆராய்ந்து தனிமைப்படுத்தல் முடிவினை அரசாங்க தகவல் திணைக்களத்தின் ( Government Information Center ) ஊடாக அறிவிப்பார்கள்.
மற்றும்படி இவ்வளவு விடயங்களில் மயிரளவும் தெரியாது இங்கு சிலர் மட்டை சுழற்றுவது போல டாக்டர். சுகுணன் அறிவிப்பதல்ல தனிமைப்படுத்தல் என்பது.
Dr.G.Sukunan
Regional Director of Health Services
Kalmunai
