Cinema

பிரபல இந்தியன் பட நடிகர் சிகிச்சை பலனின்றி மரணம்!

தமிழ் சினிமாவில், நடிகரான நெடுமுடி வேணு இந்தியன், அந்நியன், பொய் சொல்லப் போறோம், சர்வம் தாள மயம், உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேலும், 1978ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் பல்வேறு நாடகங்களிலும் நடித்துள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நெடுமுடியில் பிறந்த இவரின் இயற்பெயர் கேசவன் வேணுகோபால்.

1990ல் வெளியான His Highness Abdullah என்ற மலையாள திரைப்படத்தில் சிறந்த குணச்சித்திர நடிகராக தேர்வாகி தேசிய விருதை வென்றார். மூன்று முறை தேசிய விருது வென்ற இவர், கேரள மாநில விருது, பிலிம் பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்றைய தினத்தில் கொரோனா காரணமாக நெடுமுடி வேணு கவலைக்கிடமான நிலையில் உள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை நடந்து வந்தது.

தற்போது 73 வயதான நெடுமுடி வேணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் மறைவு திரையுலகினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading