Cinema

பிரபல இளம் நடிகை தண்ணீரில் மூழ்கிப் பலி!

பிரபல நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மராத்திய மொழி நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே (25) கோவாவுக்கு சென்ற நிலையில் அவர் பயணம் செய்த கார் கோவா பகுதியில் உள்ள நீர் நிலைக்குள் விழுந்தது. இதில் நீருக்குள் மூழ்கி அவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து கோவாவின் அர்போரா பகுதியில் நடைபெற்றுள்ளது. திங்கள் அன்று அதிகாலை நேரம் இந்த விபத்து நாய் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருடன் பயணித்த 28 வயதான ஷூபம் என்ற அவரது நண்பரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் நள்ளிரவு விருந்துக்கு சென்று திரும்பி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதற்கு அடையாளமாக அவர்களது கை மூட்டுகளில் Wristband உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading