Sports

பிரபல கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சந்தீப் லமிச்சனேவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 08 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

18 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டதுடன், விசாரணைகளுக்குப் பின்னர் இதுதொடர்பிலான வழக்கில் காத்மாண்டு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், பலாத்காரத்துக்கு உள்ளான சிறுமிக்கு நேபாள நாணயத்தில் இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் நீதிமன்றம் சந்தீப் லமிச்சனேவுக்கு உத்தரவிட்டது. அத்துடன், அவருக்கு 03 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

2022 இல் ஆகஸ்ட் மாதம் குறித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தீப் லமிச்சனேவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. இதன் பின்னர் இடம்பெற்றுவந்த வழக்கு விசாரணைகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டமையால் அவருக்கு 08 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading