Uncategorized

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்

அசத்தப்போவது யாரு புகழ் கோவை குணா உடல்நலக் குறைவினால் உயிரிழந்துள்ளார்.

கோவை விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வந்த கோவை குணா தமிழில் திரைப்படங்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவைகள் மற்றும் மிமிக்கிரி செய்து பலரது மனதில் இடம் பிடித்தவர்.

பின்னர் தமிழ்நாடு பல குரல் கலைஞர்கள் என்ற சங்கத்தில் இணைந்து பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவரது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார்.

இவர் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்களை சிரிக்க வைத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நிலையில், டயாலிசிஸ் சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவினால் சோகத்தில் இருக்கும் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading