Cinema

பிரபல நடிகர் அமீர்கான் இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்தார்!

பிரபல நடிகர் அமீர் கானும் கிரண் ராவும் 15 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் புதிய வாழ்க்கையைத் தொடர விரும்புவதால் பிரிவதாக தெரிவித்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் 1986ம் ஆண்டு நடிகை ரீனா தத்தாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜூனைத் என்கிற மகனும் ஐரா என்கிற மகளும் உள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 2002ம் ஆண்டு அமீர் கானும், ரீனா தத்தாவும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதனை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அமீர் கான் லகான் படத்தில் உதவி இயக்குநரக பணியாற்றிய கிரண் ராவை திருமணம் 2005ம் ஆண்டு செய்து கொண்டார். இவர்களுக்கு ராவ் கான் என்ற மகன் பிறந்தார். இந்நிலையில் தங்கள் 16 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின் பிரிவதாக இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading