Cinema

பிரபல நடிகர் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு!

பிரபல கன்னடி நடிகர் சத்யஜித் உடல்நலக் குறைவு காரணமாக இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நடிகர் சத்யஜித்தின் உண்மையான பெயர் சையத் நிஜாமுதீன். சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக கன்னட திரையுலகில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கி, பின்பு ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு வில்லனாக பல படங்களில் மிரட்டியவர்.

சுமார் 650 க்கும் மேற்பட்ட கன்னடப் படங்களில் நடித்த இவர், தீவிர உடல்நலக்குறைவு காரணமாக, பல வருடங்களாக நடிப்பிலிருந்து விலகியே இருந்து வந்தார்.

இந்நிலையில் 72 வயதாகிய சத்யஜித் பெங்களூரில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு கன்னட திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading