Cinema

பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் கைது!

மும்பையில் உல்லாசக் கப்பலில் போதைப் பார்ட்டி நடைபெற்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க அங்கு சென்றததில் ஷாருக்கான் மகன் ஆர்யன் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் ஃபேஷன் டிவி இந்தியா இணைந்து கிரே ஆர்க் என்ற பெயரில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை சொகுசுக் கப்பலில் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் தான் போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் சிக்கியிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், இந்த விவகாரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கானிடம், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. ஆர்யன் கான் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை, அவர் கைதும் செய்யப்படவில்லை என போதை பொருள் தடுப்பு பிரிவின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் 8 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அவர்களுக்கு போதைப் பொருள் உட்கொண்டார்களா என கண்டறிய சோதனை நடைபெற்றிருக்கிறது. அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கப்பலின் ஒவ்வொரு அறையாக சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினர், சுமார் 7 மணி நேரமாக சோதனை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கப்பல் மீண்டும் மும்பை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு பிடிபட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading