Cinema

பிரபல நடிகர் 25 வயதில் திடீர் மரணம்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்துவந்த பிரபல ‘யுபோரியா’ (இளைஞர்களுக்கான தொலைக்காட்சி டிராமா) நடிகர் அங்கஸ் கிளவுட் (25), பிரபலமான ஹெச்பிஓ தொடரில் பெஸ்கோவாக நடித்தார். இந்நிலையில் திடீரென அவரது வீட்டில் அங்கஸ் கிளவுட் காலமானார்.

இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், ‘கனத்த இதயத்துடன் அங்கஸ் கிளவுட்டிடம் இருந்து விடைபெற வேண்டியிருந்தது. சிறந்த மனிதராக இருந்த அங்கஸ் கிளவுட், ஒரு கலைஞராக, ஒரு நண்பராக, ஒரு சகோதரராக, ஒரு மகனாக விளங்கினார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவரது தந்தை இறந்தார். தந்தையின் மரண சோகத்தில் இருந்து மீள முடியாமல் இருந்த அங்கஸ் கிளவுட், தற்போது அவரது தந்தையுடன் சேர்ந்துவிட்டார். அவரது தனியுரிமை கருதி யூகங்களை தவிர்க்க கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர். அங்கஸ் கிளவுட்டின் மறைவுக்கு தொலைக்காட்சி பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading