Cinema

பிரபல நடிகை சமந்தா தாயாகப் போகிறார்?

பிரபல நடிகர் சமந்தா நடிப்பில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்துக்கொள்ள போவதாக சமூக வலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு போன்ற இரண்டு மொழியிலும் சிறந்த நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் பாணா காத்தாடி மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி கத்தி, மெர்சல் என பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் தெலுங்கில் ஷகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 11 ஆண்டுகள் தொடர்ந்து நடித்துவிட்டேன். இதனால் எனக்கு ஒரு சிறிய இடைவெளி தேவை என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் அவரும், அவரது கணவரும் கோவாவில் ஒரு பண்ணை வீடு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நெட்டிசன்கள் நடிகை சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading