World

பிரான்சில் 3.30 லட்சம் சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

பிரான்சில் கடந்த 70 ஆண்டுகளில் கத்தோலிக்க தேவாலயங்களில், 3.30 லட்சம் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்வில் சில வருடங்களுக்கு முன்னர் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் பெர்னார்டு பிரேநட் என்ற கத்தோலிக்க பாதிரியார், கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பாதிரியாளர் 75 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை விசாரணையின் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவருக்கு ஐந்தாண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரான்சில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் 1950ம் ஆண்டு முதல் 2020 வரை சிறுவர்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து விசாரணை செய்ய ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழு 2,500 பக்கங்களை கொண்ட விசாரணை அறிக்கையை கத்தோலிக்க தலைமை திருச்சபைக்கு அனுப்பியுள்ளது.

அதில் கடந்த 70 ஆண்டுகளில் கத்தோலிக்க தேவாலயங்களில், 3.30 லட்சம் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இரண்டரை ஆண்டுகள் நடந்த இந்த விசாரணையில் சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்து வலுவான ஆதாரங்கள் உள்ளவற்றை மட்டுமே ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இது தொடர்பாக 70 ஆண்டுகளில் கத்தோலிக்க தேவாலயங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 500 பாதிரியார்கள் உள்ளிட்டோர் குறித்து ஆணையம் ஆய்வு செய்தது. அதில், 3,000 பேர் பாலியல் கொடுமை செய்துள்ளது தெரியவந்தது.

அவர்களில் மூன்றில் இரு பங்கினர் பாதிரியார்கள். இந்த வகையில் 3.30 லட்சம் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இவற்றில் 40 பாலியல் குற்றங்கள் நடந்து மிக நீண்ட காலமாகி விட்டது.

22 குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டோரும் உயிருடன் உள்ளதால் வழக்கு தொடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தேவாலயங்களில் சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமைகளை தடுப்பது தொடர்பாக 45 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை செயல்படுத்தினால் எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் குறையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading