Local

பிரான்ஸிலிருந்து திருமணத்திற்காக யாழ்ப்பாணம் வந்த இளைஞன் மரணம்!

பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற நபர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தென்மராட்சி இடைக்குறிச்சி, வரணியைச் சேர்ந்த அருள்குமார் என்ற 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் பிரான்ஸில் வசித்த நிலையில் விடுமுறையில் திருமணம் செய்வதற்காக இலங்கை வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பதாக அவருக்கு திருமணம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் எதிர்வரும் நாட்களில் மீண்டும் பிரான்ஸிற்கு திருப்புவதற்காக தயாராக இருந்தார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் கடந்த சனிக்கிழமை அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வீட்டிற்கு அண்மையாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.

இதில் படுகாயமடைந்த அவர் வரணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading