World

பிரான்ஸ் நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

பிரான்ஸில் நேற்று மாலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 178 பேர் கொவிட் 19 தொற்றினால் மரணித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

8,213 பேர் கடந்த 24 மணிநேரத்தில் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

மருத்துவமனையிலும், அவசர சிகிச்சைப் பிரிவிலும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

மருத்துவமனையில் தற்போது 24,631 (+274) பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசர சிகிச்சைப் பிரிவில் 1,419 (+36) பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 178 பேர் மரணித்துள்ளனர். பிரான்சில் கொவிட் 19 தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக நூற்றுக்கும் அதிகமான மரணங்கள் சம்பவிக்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 160,617 பேர் கொவிட் 19 தொற்றினால் பிரான்சில் மரணித்துள்ளனர். இவர்களில் 131,188 பேர் மருத்துவமனைகளிலும், 29,429 பேர் முதியோர் காப்பகங்களிலும் மரணித்துள்ளனர்.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading