World

பிரிட்டனில் மோதிக் கொண்ட இரு விமானங்கள்!

பிரிட்டனில் தரையிலிருந்த இரு விமானங்கள் மோதி, ஒன்றுடனொன்று இறுகிக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஒரு விமானத்தின் முன்புறப்பகுதி மற்றொரு விமானத்தின் என்ஜினின் அடியில் சிக்கிக் கொண்டது.

இச்சம்பவம் பிரிட்டனின் ஸ்கொட்லாந்திலுள்ள அபேர்டீன் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இடம்பெற்றது.

லோகன்எயார் நிறுவனத்தின் விமானமொன்றும் பிளைபீ நிறுவன விமானமொன்றுமே இவ்வாறு மோதிக்கொண்டன.

பயணிகள், ஊழியர்கள் எவரும் இல்லாத நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லோகன்எயார் எம்ப்ரர் 145 விமானம், பிளைபீ பொம்பார்டியர் கியூ400 ரக விமானத்துடன் மோதியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்விரு விமானங்களும் ஒன்றுடனொன்று செருகப்பட்ட நிலையில் பல மணித்தியாலங்கள் அப்படியே இருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading