Local

பிரித்தானியாவில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இலங்கையர்கள் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தமிழர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவில் இருந்து திருமணம் ஒன்றிற்காக லண்டன் சென்ற இலங்கை தமிழர்கள் மூவர் அங்கு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

மேற்கு சசெக்ஸ் (West Sussex), A285 வீதியில் சிசெஸ்டர் (Chichester) பகுதியில் கடந்த சனிக்கிழமை இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் அடங்குவதாகவும், மகன் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஒருவருக்கு 25 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் யாழ். ஊரெழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை திருமண விருந்துபசாரம் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் பயணம் செய்த BMW காரைச் செலுத்திச் சென்றவர் எனக் கூறப்படும் உறவினரான பெண் ஒருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக

காயமடைந்த நிலையில் அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சசெக்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து ஏற்பட்ட Duncton கிராமப் புறத்தில் வீதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்து எவ்வாறு நடந்தது என்பது தொடர்பாக பொலிஸார் பொதுமக்களது உதவியை நாடியுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading