World

பிரித்தானியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 32,406 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 133 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 27% அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து 11வது நாளாக 30,000 மேற்பட்டவர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சனிக்கிழமை பதிவான மொத்த பாதிப்பு 31,783 எனவும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 104 எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஒப்பிடுகையில், பாதிப்பு எண்ணிக்கையில் 2% அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய தினம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,046 எனவும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 28 நாட்களில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 100 எனவும் தெரிய வந்தது.

மேலும் இங்கிலாந்தின் நான்கு தேசங்களிலும் கொரோனா பாதிப்பு உச்சம் கண்டு வருவதாக வெளியான தகவலை அடுத்து, மொத்தமுள்ள மக்கள் தொகையில் 70 பேர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading