World

பிரித்தானியா பூஸ்டர் டோஸ்களை பயன்படுத்த ஒப்புதல்!

ஆஸ்ட்ராசெனகா மற்றும் பைஸர் தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ்களை பயன்படுத்த பிரித்தானியா நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

குறித்த இரண்டு தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை பூஸ்டர் டோஸாக பயன்படுத்தலாம் என பிரித்தானியாவின் MHRA உறுதி அளித்துள்ளது. இதனால், அரசுக்கான அறிவியல் ஆலோசகர்கள் பூஸ்டர் டோஸ்கள் தொடர்பில் உரிய முடிவெடுக்க கால அவகாசம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

NHS உடனான முக்கிய ஆலோசனைகளுக்கு பின்னர் மில்லியன் கணக்கானோருக்கு பூஸ்டர் டோஸ் பெறுவதற்கான அழைப்பு விடுக்கப்படும் என்றே தெரிய வந்துள்ளது.

மேலும், பைஸர் பூஸ்டர் டோஸ் யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் எனவும், ஆனால் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் முன்னர் போட்டுக்கொண்டவர்கள் கண்டிப்பாக ஆஸ்ட்ராசெனகா பூஸ்டர் தடுப்பூசி மட்டுமே போட்டுக்கொள்ள வேண்டும் என MHRA தெளிவுப்படுத்தியுள்ளது.

மட்டுமின்றி, பைஸர் மற்றும் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பூஸ்டர் டோஸ்களாகப் பயன்படுத்தலாம் எனவும் MHRA கூறியுள்ளது.

தடுப்பூசிகளால் இதுவரை பல ஆயிரம் மக்களின் உயிர் கொரோனா பாதிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது. இதனிடையே செப்டம்பர் மாதத்தில் இருந்தே பூஸ்டர் தடுப்பூசிகள் அளிக்கத் தொடங்கப்படும் என்று கடந்த வாரம் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உறுதி அளித்திருந்தார்.

மேலும், இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலம் நெருங்குவதால் வயதானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading