Gossip

பிறந்தநாளன்று பிகினி உடையில் கேக் வெட்டிய அமீர்கான் மகளுக்கு கடும் எதிர்ப்பு!

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கானின் செல்ல மகளான ஐரா கான் தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தில் ஆமீர் கான், அவரின் முன்னாள் மனைவிகளான ரீனா தத்தா, கிரண் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆமீர் கான், மகள் ஐராவுக்காக நீச்சல் குளத்தில் பார்ட்டி கொடுத்ததையடுத்து, ஐரா கான் பிகினி உடை அணிந்து கேக் வெட்டி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார். தந்தை, தம்பி உள்ளிட்ட குடும்பத்தார் முன்பு கேக் வெட்டிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டிருந்தார் ஐரா.

நெட்டிசன்கள் ஐராவின் ஆடை தேர்வு குறித்து கேள்வி எழுப்பினர் மற்றும் அவரது தந்தை முன்னிலையில் அவர் எப்படி பிகினி அணிய முடியும் என்று ஆச்சரியப்பட்டனர். அதே நேரத்தில் இதுபோன்ற புகைப்படங்களை ஏன் இணையத்தளத்தில் வெளியிட வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பினர்.

இருப்பினும் சிலர் அவரவர்களுக்கென ஆடை சுதந்திரம் உள்ளது எனவும் பிகினி அணிவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை எனவும் ஐராவுக்கு ஆதரவாக தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading