EastLocal

பிள்ளையானை விடுவிக்கக் கோரி மட்டக்களப்பில் விசேட பூஜை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமானிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.சந்திரகாந்தனை (பிள்ளையான்) விடுதலைசெய்ய, நல்லாட்சி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சி.சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டு நேற்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியடைந்த நிலையில், அவரின் விடுதலை வேண்டி மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள முருகன் ஆலயத்தில் நேற்று விசேட பூஜை நடைபெற்றது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இந்த விசேட பூஜை நடைபெற்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading