Features

புகழைத் தேடிய யாரும் அதை அடைந்ததில்லை!

புகழைத் தேடிய யாரும் அதை அடைந்ததில்லை!
ஆப்ரகாம் லிங்கன் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய்மான நிகழ்வு:

வக்கீலாக வேலை பார்த்த, ஆப்ரகாம் லிங்கன், கட்சிக்காரர்களிடம், “இவ்வளவு கொடுங்கள்…” என கேட்கமாட்டார்; கொடுத்ததை வாங்கிக் கொள்வார்.

இதை பார்த்த அவர் மனைவி, “நீங்கள், எதற்காக வக்கீல் தொழில் செய்கிறீர்கள்…” என்று கேட்டார்.

“புகழுக்காக… அந்த புகழால் கிடைக்கும் மன அமைதிக்காக…” என்று கூறியிருக்கிறார் லிங்கன்.

“வெறும் புகழ் மட்டும், மனிதனுடைய வயிற்றை நிரப்பி விடாதே. வாழத் தெரியாத வக்கீலாக உள்ளீரே…” என்றிருக்கிறார் அவரது மனைவி.

“இந்த ஒரு சாண் வயிறு நிரம்புவதை பற்றியா, நான் அதிகம் கவலைப்பட வேண்டும். எந்த மிருகமும், பறவையும் கவலைப்படாத ஒரு விஷயத்தைப் பற்றி, மனிதன் ஏன் மூளையை குழப்பிக் கொள்ள வேண்டும்…” என்று பதிலளித்திருக்கிறார்.

இந்த சமாதானம், அவர் மனைவியை திருப்திபடுத்தவில்லை.

“மற்ற வக்கீல்கள், நிறைய சம்பாதிக்கின்றனர்; வசதிகளை பெருக்கிக் கொள்கின்றனர். நீங்கள், இதற்கு மாறாக நடப்பதில் என்ன லாபம்…” என்று மீண்டும் ஒரு கேள்விக்கணையை லிங்கனைப் பார்த்து வீசியிருக்கிறார் அவரது மனைவி.

“லாபம் சம்பாதிக்க, மூளை தேவையில்லையே… ஒரே ஒரு கைத்துப்பாக்கியை வைத்து, ஊரை மிரட்டினால் கூட பணம் குவிந்து விடும். நானும், அப்படி மாற வேண்டுமா…” என்று
கேட்டதும், அவர் மனைவியிடமிருந்து பதில் இல்லை.

ஆண்டுகள் பல கடந்து, உழைப்பால், முயற்சியால், அமெரிக்க ஜனாதிபதியானார் ஆப்ரகாம் லிங்கன்.

ஒருநாள், அவர் மனைவி, “ஒரு காலத்தில் உங்களை பணம் சம்பாதிக்கும்படி வற்புறுத்தினேன். இப்போது தான் அந்த உண்மை எனக்கு புரிகிறது…” என்று கூறியிருக்கிறார்.

“அது என்ன…” என லிங்கன் கேட்க, “பணம் சம்பாதித்த, வக்கீல்கள் யாரும், ஜனாதிபதியாக வரவில்லை. ஆனால், புகழ் தேடிய தாங்கள், ஜனாதிபதியாகி விட்டீர்…” என்று நெகிழ்ச்சியோடு சொல்லியிருக்கிறார் ஆப்ரகாம் லிங்கனின் மனைவி.

– நன்றி: முகநூல் பதிவு

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading