World

புதன்கிழமை முதல் கத்தார் விமான நிலையத்திற்கு விமானங்கள் வரத் தடை

நாட்டில் கொரோனா வைரஸ் (COVID -19) பரவுவதைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கத்தார் புதன்கிழமை 18.03.2020 முதல் தோஹாவுக்கான அனைத்து பயணிகள் விமானங்களையும் இரு வாரங்களுக்கு நிறுத்துகிறது. அதாவது வெளிநாடுகளிலிருந்து கத்தாருக்கு எந்த விமானங்களும் வர மாட்டாது.
விதிவிலக்காக சரக்கு விமானம், மற்றும் transit flight விமானங்கள் அனுமதிக்கப்படும் என்பதோடு கத்தார் பிரஜைகள் தாயகத்துக்கு பயணித்து வரும் விமானங்களும் அனுமதிக்கப்படும். மேற்படி விமானங்களில் வரும் கத்தார் பிரஜைகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading