Local

புதிய எரிவாயு சிலிண்டர்களை அறிமுகப்படுத்த தீர்மானம்!

‘லங்கா கேஸ்’ எனும் பெயரில் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த எரிவாயு நிறுவனம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்ததாகவே ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தற்போது இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின்வசம் உரிய எரிவாயு காணப்படுவதாகவும் குறித்த உயரதிகாரி தெரிவித்துள்ளார்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் சுத்திகரிப்பின் ஒரு பகுதியாக கிடைக்கப்பெறும் எரிவாயு நாட்டின் தேவையில் 5 வீதமாகும் எனவும் அந்த அளவை பிரதான இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கு வழங்குவதை இடைநிறுத்தி புதிய நிறுவனம் ஊடாக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading