World

புதிய கொரோனா அச்சத்தால் கிறிஸ்துமஸ் களை இழந்தது!

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் இந்த கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.  இந்த ஆண்டு இறுதியில் புதுவகை மாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவுவது இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை இழந்தது. ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் இணையதளம்  மூலம் நடந்த பிரார்த்தனை கூட்டங்களில், வீடுகளில் இருந்தபடியே மக்கள் கலந்து கொண்டனர். போப்பாண்டவர் இருக்கும் வாடிகன் தேவாலயத்தில் வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே மணி அடிக்கப்பட்டது. இத்தாலி அரசு 10 மணிக்குப் பிறகு  ஊரடங்கு அறிவித்துள்ளதால் வியாழக்கிழமை மாலையிலேயே பிரார்த்தனை கூட்டங்கள் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்டன.  போப் பிரான்சிஸ் இதுபற்றி கூறுகையில், ‘பொதுமக்கள் அரசின் சட்டதிட்டங்களுக்கு பணிந்து, எளிமையாக  கிறிஸ்துமசை கொண்டாட வேண்டும்’ என கேட்டுக் கொண்டார். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading