Local

புதிய கொரோனா கொத்தணி உருவாகக் கூடும் சன்ன தெரிவிப்பு!

சுகாதார வழிகாட்டுதல்களைப் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடையே புதிய கொரோனா கொத்தணி உருவாகக் கூடும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் டெல்டா மாறுபாடு பரவி வரும் நேரத்தில் இத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய ,ஆசிரியர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்படவில்லை, எனவே அவர்கள் மத்தியில் புதிய கொத்தணி உருவாகலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளதாகவும் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

மேலும் ,தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆச்சிரியர்களுக்கு உரிமை இருந்தாலும் இந்த போராட்டங்கள் அவர்களிடையே நோய் பரவுவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading