Cinema

புதிய தோற்றத்தில் களமிறங்கும் விஜய் ஆண்டனி!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கிய ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடி அதிக வசூல் செய்தது. அந்தப் படம், தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டு அங்கும் அதிக வசூல் சாதனை செய்தது.
இதையடுத்து தற்போது ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க விஜய் ஆண்டனியின் பட நிறுவனம் முடிவு செய்துள்ளது.

‘விஜன் ஆண்டனி பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் 10-வது தயாரிப்பான இந்தப் படத்தை, ‘பாரம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் விஜய் ஆண்டனி பிறந்த நாளன்று (ஜூலை-24) வெளியிடப்பட்டது.
படம் குறித்துப் பேசிய தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி, “பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம், அதே பெயரிலேயே உருவாகிறது. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக நித்யாமேனன் அல்லது அவரைப் போன்ற நடிப்புத் திறன் மிகுந்த கதாநாயகி நடிப்பார். பிரியா கிருஷ்ணசாமி இயக்குனராக அமைந்தது படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது.
விஜய் ஆண்டனி நடித்த படங்களிலேயே மிக அதிக செலவில் தயாராகும் படம் இதுதான். படத்துக்காக அவர் உடல் எடையை 15 கிலோ வரை குறைத்து இருக்கிறார்.

கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து, ஊரடங்கு தளா்வுக்குப் பின் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்ததும், ‘பிச்சைக்காரன்-2’ படம் உருவாக ஆரம்பிக்கும்” எனக் கூறியுள்ளாா்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading