Cinema

புதிய படத்தில் கமிட்டான இலங்கை நடிகை ஜனனி!!

லியோ படத்தை தொடர்ந்து பிக்பாஸ் ஜனனி நிறைய படங்களில் நடித்து வரும் நிலையில், இலங்கையர் ஒருவருடன் புதிய படத்தில் கமிட்டாகியுள்ள தகவல் புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி.

இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.

இவரின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் மூலம் பிரபல்யமடைந்து பிரபலப தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் சென்று தன்னுடைய பிறப்பு தமிழை மறக்காது.

புதிய படத்தில் கமிட்டான இலங்கை நடிகை ஜனனி- ஹீரோவும் இலங்கையராம்.. | Bigg Boss Janani Commit In New Film Photos

அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் அதே இலங்கை தமிழில் தான் பேசி விளையாடி வந்தார். அதிலும் விக்ரமன் தன்னுடைய தமிழை ஏளனம் செய்கிறார் என்று சண்டைகளும் சென்றன.

ஒரு கட்டத்தில் ஜனனியால் செய்ய முடியாத அளவு டாஸ்க்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டதாலும் அமுதவாணனுடன் குழு முறையில் செயற்பட்டமையாலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு விலகிய ஜனனி தற்போது சினிமா பக்கம் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான “லியோ” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜனனியின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி – மிஸ்கின் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் ஜனனி வருகிறார். இதற்கிடையில், இலங்கையர் ஒருவருடன் MINOR என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார்.

திரைப்படக்குழுவினர் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜனனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading