Local

புதிய பிரதமரை நியமிக்க ஜனாதிபதி இணங்கவில்லையாம்!

குறுகிய காலத்திற்கு புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அரசாங்கத்தை அமைப்பதற்கு தயார் என ஜனாதிபதி தெரிவித்தார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதை பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட அதிகாரிகள் நிராகரித்துள்ளனர் என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது
டெய்லி மிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது

குறுகியகாலத்திற்கு புதிய பிரதமரின் கீழ்; இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்,எனினும் இந்த சந்திப்பில் கலந்துகொண்ட அதிகாரிகள் இதனை நிராகரித்துள்ளனர்.

இடைக்கால அரசாங்கம் குறித்து ஆராயப்பட்டது என தெரிவித்துள்ள சிரேஸ்ட அதிகாரியொருவர் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அதன் யோசனைகளை முன்வைக்குமாறு கேட்;டுக்கொண்டார்,நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கேட்டுக்கொண்டார் என தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமென்றால் அவர்கள் தாங்கள் நியமிக்க நினைக்கின்றவரை  பிரதமராக  நியமிக்கலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார் என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமித்ததும்  அது குறித்து ஆராயலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும் ஜனாதிபதி புதிய பிரதமரின் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்குஇணங்கியுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading