Local

புதிய பிரதமர் ரணிலுக்கு மனோ கணேசன் வாழ்த்து!

ரணில் விக்கிரமசிங்க தனிநபராக சபைக்கு வந்தார். இப்போது பிரதமர்.

எதிர்வரும் தினங்களில், அவர் ஆட்சியமைத்து, கபினட் அமைத்தால், அவருக்கு 113+ கிடைக்கலாம். அப்போது அவர் தனிநபர் அல்ல. ஆகவே ஆளட்டும்.

அவருக்கு எமது பண்பான வாழ்த்துகள்..!

ரணிலுக்கு இழக்க எதுவுமில்லை..!

எமது ஐக்கிய மக்கள் கூட்டணி, ஆட்சி பொறுப்பை ஏற்காமைக்கு காரணம், பிரதான எதிரணியான எமது கொள்கை கோட்பாடுகள்.

நமது கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, சிறுபான்மை கட்சி. இந்த நிமிடம்கூட, கட்சியாக நாம் முடிவு செய்தால், மிக பிரபலமான அமைச்சு பதவிகளை பெற்று ஆட்சியில் நாம் பங்கு பெறலாம். அதற்கான அழைப்பு எமக்கு எப்போதும் இருக்கிறது.

ஆனால், அதை நாம் செய்யவில்லை. மாறாக வெளியிலிருந்து பிரதமரை, எமது “முன்னாள் பிரதமரை” வாழ்த்துகிறோம்.

தற்சமயம், தமிழ் முற்போக்கு கூட்டணியாக, நாம் எதிரணியில் இருக்கிறோம். நடப்புகளை அவதானித்து பொறுப்புடன் கட்சியாக பயணிக்கிறோம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading