Local

புதிய முறைமையின் கீழ் இன்று முதல் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் நோய் நிலைமைக்கு அமைய சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்புதல் அல்லது வீட்டினுள் வைத்து பராமரிப்பதற்காக இன்று வியாழக்கிழமை முதல் புதிய முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அதன்படி, மேல் மாகாணத்தினுள் புதிய முறைமை செயற்படுத்தப்படவுள்ளதாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு புதிய முறைமையின் கீழ் 1904 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் ஒன்றில் தனது நோய் நிலைமை குறித்து கொரோனா தொற்றாளர் அறிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறுந்தகவல் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading