Local

புதிய வகை கொரோனா வைரஸ் 29 நாடுகளில் கண்டுபிடிப்பு!

புதிய வகை உருமாற்றம் ஏற்பட்ட கொரோனா வைரசை 29 நாடுகளில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி ,இவற்றை வேரியன்ட் ஆப் இன்ட்ரஸ்ட் என்று பெயரிட்டு அழைக்கின்றனர். முதன்முதலாகப் பெரு நாட்டில் இந்தவகை கொரோனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காணப்பட்டது.

அதற்கமைய ,தற்போது அது லத்தீன் அமெரிக்கா, அர்ஜண்டினா, சிலி உள்ளிட்ட 29 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வகை கொரோனாவை கையாள்வதில் பல்வேறு நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

மேலும் ,இந்நிலையில் மற்றொரு புதிய வகை கொரோனா வைரசை உலக சுகாதார அமைப்பு அடையாளம் காட்டியுள்ளது. அந்த வைரசின் தன்மை குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading