Local

புதிய வைரஸ் தொற்று இலங்கையர்கள் இருவர் அடையாளம்!

பிரித்தானியாவில் பரவிவரும் புதிய கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள இரு இலங்கையர்கள் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவர்கள் இருவரும் கடந்த 24 மணிநேரத்திற்குள் நாடு திரும்பியவர்களிடையே இருந்தவர்கள் என கோவிட் ஒழிப்பு பற்றிய தேசிய செயலணி தெரிவிக்கின்றது.

நேற்றையதினம் 6 இலங்கையர்கள் நாடு திரும்பியிருந்த நிலையில் அவர்களில் இருவர் பிரித்தானியாவிலிருந்து வந்தவர்கள்.

பிரிட்டனுக்கான விமான சேவைகள் இரத்து செய்யவிருந்த திகதிக்கு முன்னதாகவே அங்கிருந்து இவர்கள் இருவரும் நாடு திரும்பியிருந்ததாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

அத்துடன் குறித்த இருவர் மற்றும் இத்தாலி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்த 4 பேர் உட்பட 6 பேரும் விசேட விடுதியொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading