Cinema

புதுப்பொலிவுடன் நவீன தொழில்நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வரும் டைட்டானிக்!

1997-ல் வெளியான ‘டைட்டானிக்’ படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு 3D வடிவில் புதுப்பொலிவுடன் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

காதலை மையப்படுத்தி எத்தனை படங்கள் வந்தாலும் காதல் என்றவுடன் பெரும்பாலான காதலர்களுக்கு நினைவில் வருவது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான ‘டைட்டானிக்’ படம்தான். அந்தப் பிரமாண்ட கப்பலில் கதையின் நாயகன் ஜாக், நாயகி ரோஸ் நிற்கும் காட்சி காதலர்களின் மனதில் இப்போதும் நிழலாடும். டிசம்பர் 17-ம் தேதி 1997-ல் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் உலகம் முழுவதும் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த எடிட்டிங் உள்ளிட்ட 11 ஆஸ்கர் விருதுகளை வென்றது.

இப்படி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்தை முன்னிட்டு 3D, 4k, HDR வடிவில் புதுப்பொலிவுடன் இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று புதுப்பொலிவுடன் மீண்டும் ‘டைட்டானிக்’ உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading