World

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சர்வதேச தொலைபேசி அழைப்புகள் இலவசம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் புனித ரமலான் மாதத்தினை முன்னிட்டு துபாய் மெட்ரோ நிலையங்களை பயன்படுத்துவோருக்கு சர்வதேச தொலைபேசி அழைப்புகள் இலவசமாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய சேவைக்கு என சிறப்பு தொலைபேசி சாவடிகள் துபாய் மெட்ரோ நிலையத்தில் அமைக்கபப்ட்டுள்ளது. ரமலான் மாதத்தில் மெட்ரோ நிலையங்களை பயன்படுத்துவோர் இனி, தங்கள் உற்றார் உறவினர்களுக்கு உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இலவசமாக தொடர்பு கொள்ளலாம்.

புனித மாதம்... சர்வதேச தொலைபேசி அழைப்புகளை இலவசமாக்கிய ஐக்கிய அமீரகம் | During Ramadan Free International Calls

 

தற்போது Al Ghubaiba, Union, மற்றும் Jebel Ali உள்ளிட்ட நான்கு மெட்ரோ நிலையங்களில் 4 தொலைபேசி சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் மில்லியன் கணக்கான வெளிநாட்டவர்கள் தங்கள் உற்றார் உறவினர்களை பிரிந்து, வேலை நிமித்தம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கி வருகின்றனர்.

அவர்களுக்கு உதவும் வகையிலேயே இலவச சர்வதேச அழைப்புகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச தொலைபேசி சேவையானது துபாய் மெட்ரோ மட்டுமின்றி டிராம் சேவை நிலையத்திலும் அமுலில் இருக்கும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading