Local

புனித ஹஜ் கடமையின் போது கஃபாவை தொடுவதற்குத் தடை

இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்கான புதிய சுகாதார நெறிமுறைகளை சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இது உள்நாட்டு யாத்ரீகர்களுக்கு மட்டுமே திறந்திருக்கும்.
காபாவைத் தொடுவது தடைசெய்யப்பட்டு, வெகுஜன பிரார்த்தனைகளின் போதும், கஃபாவைச் சுற்றும் போதும் ஒன்றரை மீட்டர் தூரத்திலுள்ள சமூக தூர இடைவெளி அமுல்படுத்தப்படும்.

மோனா, முசாதலிஃபா மற்றும் அராபத் ஆகிய இடங்களில் ஹஜ் தளங்களுக்கான அணுகல் ஜூலை 19ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 2ஆம் திகதி வரை ஹஜ் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே இருக்கும் என்று மாநில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதோடு, அதில் 1,900இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading