Local

புறக்கோட்டை புடவைக்கடையில் தீப்பரவல் – பாதிக்கப்போரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

புறக்கோட்டை 2ஆம் குறுக்கு வீதியில் உள்ள புடவைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்குண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புறக்கோட்டை இரண்டாம் குறுக்கு வீதியில் உள்ள புடவைக் கடையொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏழு தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்தினால் காயமடைந்த மற்றும் பாதிப்புக்குள்ளான 21 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஆறு பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புறக்கோட்டையில் உள்ள கடையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

புறக்கோட்டை இரண்டாம் குறுக்கு வீதியில் உள்ள புடவைக் கடையொன்றில் இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் 7 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

fire
அத்துடன், குறித்த கடையை அண்மித்த விற்பனையகங்களுக்கு தீ பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
fire

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading