Local

புலனாய்வுத் துறை அதிகாரிக்கு கொரோனா வந்தது சமூகப் பரவலில்லையா?

பொலிஸ் புலனாய்வுத் துறை அதிகாரிக்கு கொரோனா வந்திருப்பது சமூகப் பரவல் இல்லையா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்சியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன்படி இது தொடர்பாக தனது ருவிட்டரில் அவர் இன்று (25) காலை தமிழில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘நாடாளுமன்றத்தின் பொலிஸ் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், கொரோனா இன்னும் சமூக பரவல் நிலையை எட்டவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கூறிவருகின்றமை உண்மைக்கு புறம்பாகத்தானே உள்ளது?’ என கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading